உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க., துவக்க விழா தர்மபுரியில் பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., துவக்க விழா தர்மபுரியில் பொதுக்கூட்டம்

தர்மபுரி: தர்மபுரியில், அ.தி.மு.க., 53 துவக்க விழா பொதுக்கூட்டம், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நடந்தது. நகர கழக செயலாளர் ரவி வரவேற்றார்.கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல், 2 முறை வெற்றி பெற்ற கட்சி என்ற பெருமை, அ.தி.மு.க.,விற்கு உள்ளது. மாற்ற கட்சிகள் யாரும் கூட்டணி அமைக்காமல் இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. வரும், சட்டசபை தேர்தலில், நாம் அனைவரும், பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் கடுமையாக உழைத்து மீண்டும், அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ