மேலும் செய்திகள்
54வது ஆண்டு துவக்க விழா: அ.தி.மு.க., கொண்டாட்டம்
1 hour(s) ago
அ.தி.மு.க., 54வது ஆண்டு துவக்க விழா
1 hour(s) ago
தர்மபுரி, அ.தி.மு.க.வின், 54-ம் ஆண்டு தொடக்க விழாவை, நேற்று, தர்மபுரி மாவட்டம் முழுவதும் கட்சியினர் கொண்டாடினர். தர்மபுரி கட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பூகடை ரவி தலைமை வகித்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாநில மருத்துவர் அணி இணைசெயலாளர் அசோகன், அவை தலைவர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.*கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஓசூர் பாகலுார் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், கட்சியின், 54ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பகுதி செயலாளர் ராஜூ தலைமையில், ஓசூரில் ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
1 hour(s) ago
1 hour(s) ago