உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொம்மிடி நகர முன்னேற்றம் அனைத்து கட்சியினர் கூட்டம்

பொம்மிடி நகர முன்னேற்றம் அனைத்து கட்சியினர் கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி நகரம் முன்னேற்றம் அடைய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம், பொம்மிடி தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்-வாகிகள், ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்கங்கள் கலந்து கொண்டன.இக்கூட்டத்தில், பொம்மிடியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா மற்றும் ஒன்றியம் உருவாக்கப்படவேண்டும். பொம்மிடி முதல் வீராட்சியூர் வழியாக, ஏற்காடுக்கு பஸ் வசதி செய்ய வேண்டும். பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் கோவை, திருவனந்தபுரம் கொச்சுவேலி, நாகர்கோவில், பெங்களூரு என, கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பொம்மிடி முதல், காளிக்கரம்பு, மிட்டாநுாலஹள்ளி வழியாக, தர்மபுரிக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், உள்-ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ