மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்...
23-Mar-2025
சேலம்:ஜே.இ.இ., அமர்வின் இரண்டாம் கட்டத்தேர்வு முடிவுகள் கடந்த, 19ல் வெளியிடப்பட்டது. தேர்வில் சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளனர்.இந்தாண்டு, முதல் கட்டத்தேர்வு ஜனவரி மாத இறுதியிலும், இரண்டாம் கட்டத்தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடந்தது. முதல் கட்டத்தேர்வு முடிவு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மற்றும் அமர்வு 2ன் முடிவுகள் நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இரண்டு அமர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், தேசிய அளவில் என்.ஐ.டி./ஐ.ஐ.ஐ.டி., கல்லுாரிகளில் சேரத் தகுதி பெறுவர் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு தகுதியின் அடிப்படையிலும் சேர்க்கையானது தீர்மானிக்கப்படும். ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த, 61மாணவர்களில் 33 (54%) மாணவர்கள் 90 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களில், 97 சதவீதம் பேர் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் ஹாரிஷ் 98.48, அர்மான் தாரிக்,- 97.75, கவிசன், 97.67 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.அவர்களை செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, பள்ளி செயலாளர் தனசேகர், பள்ளி தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், நிர்வாக அலுவலர் பிரவீன்குமார், துணை முதல்வர் நளினி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
23-Mar-2025