பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை
பாலக்கோடு :தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுநிதி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்தது. பஞ்., தலைவர் முரளி பணிகளை தொடங்கி வைத்தார். நகர அவைத் தலைவர் அமானுல்லா, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மோகன், குமரன், மாவட்ட பிரதிநிதி இருசன், ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.