உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கழுத்து அறுக்கப்பட்டு வீசப்பட்ட பெண் உடல்

கழுத்து அறுக்கப்பட்டு வீசப்பட்ட பெண் உடல்

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கொம்மநாயக்கனஅள்ளி அருகே, தர்மபுரி - -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையோரம், 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வீசப்பட்டு கிடந்தது. பாலக்கோடு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசார‍ணை மேற்கொண்டனர். இதில், இறந்தவர் தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மந்தைவெளியை சேர்ந்த கணபதி மனைவி வள்ளி என்பதும், இருவரும், 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. எஸ்.பி., மகேஸ்வரன் சம்பவ இடத்தில் விசார‍ணை ‍மேற்கொண்டார். அவரது உத்தரவின்படி, பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர் தலைமையில், 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !