புல்லட் மாயம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் திரு.வி.க., நகரை சேர்ந்தவர் பிர-வீன்ராஜ், 38. இவர், தன் வீட்டின் மேல்மாடியில் வண்ண மீன்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கடந்த, 16ல் இரவு, 9:00 மணிக்கு பிரவீன்ராஜ் ராயல் என்பீல்டு கிளாசிக் புல்லட் 350ஐ தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு துாங்கச் சென்-றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது புல்லட்டை காண-வில்லை. புகார் படி அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.