மேலும் செய்திகள்
ஜி.ஹெச்.ல்., ஆய்வு
11-Apr-2025
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு கார் வியாபாரிகள் ஆலோசகர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கமல்கான், பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் நாசர் தலைமை வகித்து பேசுகையில், ''ஆர்.சி., புத்தகத்தை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பழைய சட்டத்தின் படி, காரின் பைனான்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆர்.சி., புத்தகத்தை யார் கொடுக்கிறார்களோ, அவர்களிடமே திருப்பி கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் காரின் உரிமையாளருக்கு தபாலிலோ, கூரியரிலோ ஆர்.சி., புத்தகத்தை அனுப்பக்கூடாது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட பல பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ஆர்.சி., புத்தகத்தை கொடுத்தால் ஒரு வாரம் ஆனாலும், பணியை முடித்து திருப்பி கொடுப்பதில்லை. எனவே, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்,'' என்றார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்ட கார் வியாபாரிகள் பங்கேற்றனர்.
11-Apr-2025