உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதியின்றி பேனர் வைத்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்த தே.மு.தி.க.,வினர் மீது வழக்கு

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தே.மு.தி.க., 21ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தே.மு.தி.க., இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பேசியனார். பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அரூர் தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், கச்சேரிமேடு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், தே.மு.தி.க.,வினர் பேனர்களை வைத்திருந்தனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றி பேனர்களை வைத்ததாக, அரூர் வி.ஏ.ஓ., முரளி அளித்த புகார்படி, தே.மு.தி.க., அரூர் நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய செயலாளர் சேட்டுராவ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சிலர் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ