உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சிமென்ட் சாலை பணி துவக்கம்

சிமென்ட் சாலை பணி துவக்கம்

சூளகிரி: சூளகிரி ஒன்றியம், அங்கொண்டப்பள்ளி பஞ்., எஸ்.திம்மசந்-திரம் கிராமத்தில், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., தொகுதி மேம்-பாட்டு நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனு-சாமி, பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். மேலும், ஆழ்-துளை பம்புசெட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ., முனுசாமி, பேரிகை சாலையிலிருந்து, எஸ்.திம்மசந்திரம் கிராமம் வரை தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதிய-ளித்தார். கிராமப்புற இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்-களை வழங்கினார். சூளகிரி வடக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செய-லாளர் பாபு வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் மல்லையன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி