27ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு
27ல் பிறந்த குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிப்புஅரூர், டிச. 2- துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் கடந்த, 27ல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், அரூர் அரசு மருத்துமனையில், நவ., 27ல் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 2 குழந்தைகளுக்கு தலா, ஒரு கிராம் மதிப்பிலான தங்க மோதிரம் அணிவித்தார். இதில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மரம் விழுந்து கார் சேதம்தர்மபுரி, டிச. 2-'பெஞ்சல்' புயலால், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை தர்மபுரி நகராட்சி அருகே இருந்த, புளியமரத்தின் கிளை ஒன்று உடைந்து விழுந்தது.அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த, கார் சேதமடைந்தது. நகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம், மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி. எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும் நகராட்சி சாலையில், தொடர் மழையால், மக்கள் நடமாட்டமின்றி இருந்ததால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.