மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
10-Nov-2024
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 15---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த பிரதமர் நேருவின், 135வது பிறந்தநாள் விழாவையொட்டி, தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில், குழந்தைகள் தின விழா நடந்தது.பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் கவுதமன், பொருளாளர் கோகுல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, கல்வியாளர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் உதவி தலைமை ஆசிரியர் தமிழ்தென்றல் வரவேற்றார்.ஆசிரியர்கள் கிருஷ்ணன், தெய்வம், கவியரசு, தனசேகரன் ஆகியோர் குழந்தைகள் தின விழா குறித்து பேசினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.முன்னதாக நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.
10-Nov-2024