அரசு பள்ளியில் கட்டட வசதியின்றி வராண்டாவில் நடக்கும் வகுப்புகள்
தர்மபுரி: தர்மபுரி அருகே, அரசு பள்ளிக்கு வகுப்பறை கட்டடங்கள் இல்-லாததால், மகளிர் திட்ட கட்டடத்தின் வராண்டாவில், வகுப்புகள் நடந்து வருகிறது.தர்மபுரி அடுத்த, கே.நடுஹள்ளி, பஞ்., கொளகத்துாரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 261 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்நி-லையில், பள்ளி கட்டத்தில், தலைமை ஆசிரியர் அலுவலகம், நுாலகம் உட்பட, 7 வகுப்பறைகள் மட்டும் உள்ளன. இதில், 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு வகுப்பறையில் போதிய இடமின்றி தவித்து வருகின்றனர். இந்நி-லையில், 6ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாத நிலையில், பள்ளி அருகிலுள்ள மகளிர் திட்டத்தின், வி.பி.ஆர்.சி., கட்டடத்தின் வராண்டாவில் வகுப்புகள் நடத்தப்-பட்டு வருகிறது. மழை வரும்போது, மகளிர் திட்ட அலுவல-கத்தில், 2 வகுப்பு மாணவர்கள் ஒரே அறையில் இடநெருக்க-டியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. எனவே, மாணவர்-களின் நலன் கருதி கூடுதலாக, 3 வகுப்பறை கட்டங்களை, பள்ளி கல்வி துறை சார்பில், கட்டி கொடுக்க வேண்டும். மேலும், இங்-குள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 5 கி.மீ., துாரம் பய-ணித்து, தர்மபுரி அவ்வையார் பள்ளிக்கு செல்லும் நிலை உள்-ளது. எனவே, கொளகத்துாரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்-ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.