ஹெல்மெட் அணிந்தவர்களை கவுரவித்த தர்மபுரி டி.எஸ்.பி.,
ஹெல்மெட் அணிந்தவர்களைகவுரவித்த தர்மபுரி டி.எஸ்.பி.,தர்மபுரி, அக். 3- காந்தி ஜெயந்தி மற்றும் தர்மபுரி தனி மாவட்டமாக உதயமான, 60ம் ஆண்டை முன்னிட்டு, தர்மபுரி நான்கு ரோட்டில், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தர்மபுரி டி.எஸ்.பி., கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். தர்மபுரி டவுன் போக்குவரத்து போலீசார் சார்பில், சாலை விதிகளை கடைபிடிப்பது மற்றும் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காந்தி ஜெயந்தி மற்றும் தர்மபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உதயமாகி, 60 ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, தர்மபுரி நான்கு ரோடு பகுதியில், போக்குவரத்து போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு, காந்தி பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், கதர் ஆடையை அணிவித்து, தர்மபுரி உதயமான தினத்தை நினைவு கூறும் வகையில், நெல்லிக்கனி மற்றும் இனிப்புகளை தர்மபுரி டி.எஸ்.பி., சிவராமன் வழங்கி கவுரவித்தார். ஹெல்மெட் அணிவதால், ஏற்படும் நன்மைகள் குறித்து, டி.எஸ்.பி., வாகன ஓட்டிகளுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், போக்கு வரத்து எஸ்.ஐ.,க்கள் சின்னசாமி, ரகு, சதீஷ்குமார், கோமதி மற்றும் சமூக ஆர்வலர்கள் நற்சுவை சுகுமார், சுபாஷ், கதர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.