உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேர்தல் பணிக்காக பூத் வாரியாக வாகனங்கள் பிரித்து அனுப்பும் பணி

தேர்தல் பணிக்காக பூத் வாரியாக வாகனங்கள் பிரித்து அனுப்பும் பணி

தர்மபுரி: தர்மபுரியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பாது-காப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு பணிகளை மேற்கொள்வது மற்றும் பூத் வாரியாக வாகனங்களை பிரித்து அனுப்பும் பணிகள் குறித்து, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், தலைமையில் வழி-காட்டுதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில், துணை ராணுவத்-தினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, தேர்தல் நெறிமு-றைகள், ஒழுங்கு விதிகள் மற்றும் பணியின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து, விரிவான ஆலோ-சனை வழங்கினார்.மேலும், தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களை நேரில் ஆய்வு செய்து, பூத் வாரியாக வாகனங்களை பிரித்து அனுப்பும் பணியை பார்வையிட்டார். அதை தொடர்ந்து, தேர்தல் ஓட்டுப்பதிவு சமயத்தில், சட்டம் - ஒழுங்கு பணிகளை அனைத்து படையினரும் பொறுப்புடன் செயல்பட அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை