உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடத்துார் பேரூராட்சி வாரச்சந்தையில் கூடுதல் சுங்கம் வசூலால் அதிருப்தி

கடத்துார் பேரூராட்சி வாரச்சந்தையில் கூடுதல் சுங்கம் வசூலால் அதிருப்தி

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பேரூராட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் சந்தையில், தக்காளி, மக்காச்சோளம், வெற்றிலை, பருப்பு வகைகள், வெல்லம், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்க வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர்.அவர்களிடம், 'கேட் பணம்' வசூலிக்க பேரூராட்சியில், ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்தவர்கள் அரசு நிர்ணயித்த தொகையை வாங்காமல், கூடுதலாக வசூல் செய்வதாக வியா-பாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.சந்தையில், 4 சக்கர வாகனத்துக்கு, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும், சேவல், கோழி, மாடு, ஆடு விற்பனை, சாலையோர கடைகள், சிக்கன் கடைகள், தள்ளுவண்டி கடைகள், டிபன் கடைகளுக்கு, 50 முதல், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு முறையாக ரசீது வழங்கப்படுவதில்லை. இதேபோல், 25 கிலோ கொண்ட அரிசி சிப்பத்துக்கு, 25 முதல், 50 ரூபாயும், தக்-காளி கூடைக்கு, 50 ரூபாயும் வசூல் செய்யப்படுவதால், வியாபா-ரிகளும், பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.பேரூராட்சி நிர்ணயித்த தொகையை விட, கூடுதலாக அடாவடி வசூலில் ஈடுபடுபவர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கட்டண விபரங்களை, தகவல் பல-கையில், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சந்-தையில் வைக்க வேண்டுமென்றும், வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !