மேலும் செய்திகள்
பர்னிச்சர் கடையில் தீ விபத்து
31-Mar-2025
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சகாயராஜ், 48. கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை, 10:00 மணியளவில் குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றிருந்தார். அப்போது, வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு பெட்ரூமில் இருந்து புகை வந்தது. சகாயராஜ் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் தீ மள மளவென பரவியது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதில், 2 பீரோக்கள், வீட்டிலிருந்த, 3 காஸ் அடுப்புகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Mar-2025