| ADDED : டிச 04, 2025 07:19 AM
பாலக்கோடு, பாலக்கோடு வட்டாரத்தில் வேளண் திருவிழா நடப்பது குறித்து, வேளாண் உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, புலிக்கரை கிராமத்தில் உழவர் திருவிழா நாளை, 5ம் தேதி நடக்கிறது. இதில், வேளாண் துறை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, விதை சான்றளிப்பு துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, சர்க்கரை துறை, மீன்வளத்துறை ஆகிய துறை அலுவலர்கள், தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.மேலும், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக விளக்கம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் செயல் விளக்க கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.