உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை

தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை

பாப்பிரெட்டிப்பட்டி: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, தர்ம-புரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா உத்தரவின் படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கையும், அதற்கான ஒத்-திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையில் நேற்று காலை, வாணியாறு அணையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது. அப்-போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களை ரப்பர் படகில் சென்று மீட்பது, அவர்களை கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, நீரில் மூழ்கியவர்களை படகை பயன்படுத்தியும், டியூப் அணிந்து சென்று தேடுவது போன்றும், தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை