உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்தர்மபுரி, அக். 10-பா.ம.க., தலைவர் அன்புமணி பிறந்த நாளையொட்டி, நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஜருகு வாரச்சந்தை வளாகத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. பா.ம.க., மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார். தர்மபுரி, பா..ம.க., - எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.பி., செந்தில் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். இதில், பொது மருத்துவம், கண் பரிசோதனை, சிறுநீரகம் மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உட்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், நல்லம்பள்ளி சேர்மன் மகேஸ்வரி, பா.ம.க., நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை