மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், வகுப்பறைக்கு முன், தரைக்கு பேவர் பிளாக் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை துறையின் முதன்மை செயலாளரை, எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் சந்தித்து, பசுமை பள்ளியாக மாற்ற கடிதம் வழங்கியதை, தொடர்ந்து, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில், 'பசுமை பள்ளி' திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மேலும், பள்ளியில் அன்பரசி என்ற ஆசிரியை தலைமையில் நடந்த, பழங்கால நாணயங்கள் கண்காட்சியை மாணவ, மாணவியரின் பார்வைக்கு தொடங்கி வைத்தார்.இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், பசுமை திட்ட ஆசிரியர் சின்னசாமி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
16-Aug-2025