கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் ரூ.2.62 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி,தர்மபுரி மாவட்டம் அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில், பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமையிலான போலீசார் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நேற்று அதிகாலை, 1:30 மணிக்கு அரூர் - சேலம் செல்லும் சாலையில் காளிபேட்டை அருகே டொயோட்டோ பார்ச்சூனர் சில்வர் கிரேவ் சொகுசு கார், விபத்துக்குள்ளாகி சாலையோரம் நின்றிருந்தது. இது குறித்து, சேலம் தேசிய நெடுஞ்சாலை உதவி பொறியாளர் உமாராணி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவ்வழியே வந்த போலீசார், அக்காரை சோதனை செய்தனர்.காரில், மொத்தம், 61 மூட்டைகளில், 2.62 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 475 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கைப்பற்றினர். தொடர்ந்து, காருக்கு சொந்தமானவர்கள் யார், எங்கிருந்து வந்தது என அப்பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.