மேலும் செய்திகள்
புவனகிரி தாசில்தார் பொறுப்பேற்பு
11-Jun-2026
அரூர்; தர்மபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் தலைமையில், பூத-நத்தம் பிரிவு வனவர் ஐயப்பன், வனக்காப்பாளர் கவுரப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று காலை பூதநத்தம் பிரிவு, தாளநத்தம் காப்புக்காடு, கவரமலை வனக்காவல் சுற்று, தேன்கல் வழி சராகத்தில், ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு நபர் உடும்பை தோல் உரித்து இறைச்சியாக்கி கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்-ததில், கேத்துரெட்டிப்பட்டி அடுத்த புடக்கட்-டையான் கொட்டாயை சேர்ந்த செல்வம், 39, என்-பதும், அவர் நாய் பிடித்து வந்த உடும்பை, சமைத்து சாப்பிடுவதற்காக, அதன் தோலை உரித்து இறைச்சியாக்கி கொண்டிருந்தது தெரிந்-தது. அவரை கைது செய்த வனத்துறையினர்,அவரிடமிருந்து உடும்பை பறிமுதல் செய்தனர்.
11-Jun-2026