உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண்பாண்ட தொழிலுக்காக ஏரியில் மண் எடுக்க அழைப்பு

மண்பாண்ட தொழிலுக்காக ஏரியில் மண் எடுக்க அழைப்பு

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:-தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளிலிருந்து விவசாய பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்த, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 42 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 111 ஏரிகள் என, 153 நீர்நிலைகள் தேர்வு செய்து, மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்து, இணையதளம் வழியாக தாசில்தார் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.அதன்படி மாவட்டத்தில், 1,431 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு அதில், 945 விண்ணப்பங்களுக்கு தாசில்தார்கள் அனுமதி அளித்துள்ளனர். இதில், 1,20,753 கன மீட்டர் வண்டல் மற்றும் களிமண் எடுத்து விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர். மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் விவசாய நிலங்களை மேம்படுத்த, மண்பாண்ட தொழிலை சிறப்புற செய்ய, உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள, இ- சேவை மையங்களை அணுகி, https//tnesevai.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !