பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வக்கீல் கைது
தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளிப்பேட்டையை சேர்ந்தவர் சிவண்யா, 35, தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது, தர்மபுரி செந்தில் நகரில் வசித்து வரும் சிவண்யாவிற்கும், பத்தலஹள்ளியை சேர்ந்த வக்கீல் தீனா, 25, என்பவருக்கும் கடந்த, ஓராண்டிற்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தீனாவின் நடத்தை சரியில்லாததால் அவரிடம் பழகுவதை சிவண்யா நிறுத்தியுள்ளார். கடந்த, 8 மாதங்களுக்கு முன் மதியம், 1:00 மணிக்கு சிவண்யாவிடம், தீனா, 30,000 ரூபாய் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் சிவண்யா மற்றும் அவரது தாயை தீனா தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும், சிவண்யாவின் தோழிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சிவண்யா குறித்து அவதுாறாக கூறி வந்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிவண்யா புகார் படி, தர்மபுரி போலீசார் தீனாவை கைது செய்தனர்.