உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெற்றி பெற்ற மாணவியருக்கு அமைச்சர் பரிசு

வெற்றி பெற்ற மாணவியருக்கு அமைச்சர் பரிசு

வெற்றி பெற்ற மாணவியருக்கு அமைச்சர் பரிசுபாலக்கோடு, அக். 11-தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று காலை, 8:00 மணிக்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், வினாடி, வினா போட்டியிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.அப்போது அவர், ஒவ்வொரு மாணவியரும், சக மாணவியருக்கு பாடத்திலுள்ள சந்தேகங்களை தீர்க்க நாள்தோறும் சொல்லித்தர வேண்டும். சக மாணவியரும் தங்களுக்கு தெரிந்த பாடத்தை மற்ற மாணவியருக்கு கற்றுத்தர வேண்டும். கல்வியுடன் சேர்ந்து, ஒழுக்கம், பணிவு, நேரம் தவறாமையை கடைபிடித்து, வாழ்வின் உன்னத நிலைய அடைய, மாணவியர் பாடுபட, மாணவியருக்கு அறிவுறுத்தினார்.கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளி முதலிடம் பெற்றதற்காக தலைமை ஆசிரியை புனிதா மற்றும் சக ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளியில் நடந்து வரும் கூடுதல் கட்டட பணிகளை விரைந்து முடித்து, மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில், பாலக்கோடு பேரூராட்சி துணைத்தலைவர் முரளி, துணைத்தலைவர் இதயத்துல்லா, உள்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை