மேலும் செய்திகள்
சட்டப்பணிகள் புகைப்பட கண்காட்சி
01-Nov-2024
தர்மபுரி: தமிழ்நாடு, மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சட்ட சேவைகள் குறித்த, புகைப்பட கண்காட்சியை நேற்று, தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆனந்த் தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் செயலாளர் ஆயிஷா பேகம் வரவேற்றார். தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆனந்த், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்டப்பணிகள் குழு செயல்பாடு, இலவச சட்ட ஆலோசனை, சமரச மையம், மக்கள் நீதிமன்றம், இலவச சட்ட உதவிகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு முகாம்கள், இலவச சட்ட உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்து கூறினார்.இதில், குடும்ப நல நீதிபதி கீதாராணி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, போக்சோ நீதிபதி சிவஞானம், சிறப்பு மாவட்ட நீதிபதி (விபத்து) ராஜா, முதன்மை சார்பு நீதிபதி சிவக்குமார், கூடுதல் சார்பு நீதிபதி பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு நீதிபதி விபிசி, வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
01-Nov-2024