அடிப்படை வசதிகள் கோரி மனு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மத்தியம்பட்டி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர், தார்ச்சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, த.வெ.க., நிர்வாகிகள் அரூர் பி.டி.ஓ., மார்க்ரெட் வசம் மனு அளித்தனர். இதில், அரூர் நகர செயலாளர் மதலைமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.