உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், 3 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரித்து, அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.இது குறித்து, பென்னாகரத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில், 'பென்னாகரம் அருகே, ஜக்கம்பட்டியில், 2 அரசு டாஸ்மாக் கடை உள்ளது. மேலும், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, 2 கி.மீ., தொலைவிலுள்ள எர்ரகொல்லனுாரில் புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்' என்றனர். நல்லகுட்லஹள்ளி அடுத்த, கொட்டாய்மேடு கிராமத்தில், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், மாரண்டஹள்ளி பேரூராட்சியில் டாஸ்மாக் கடையால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைவதால் அக்கடையை அகற்ற பொதுமக்கள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி