பி.டி.ஓ., அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்
அரூர் 'அரூர் அருகே பொதுவழிப்பாதை அமைத்து கொடுக்காததை கண்டித்து, பி.டி.ஓ., அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்' என, வி.சி., அறிவித்துள்ளது.அரூரில், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், தர்மபுரி மாவட்டம், அரூர் வி.சி., கட்சி சார்பில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அரூர் அடுத்த பாளையம் கிராம மக்களுக்கு நீண்ட நாள் பிரச்னையான பொதுவழிப்பாதையை அமைத்துக் கொடுக்காமல் தனிநபரின் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மார்கிரேட் மேரி, தாசில்தார் பெருமாள், ஊராட்சி செயலாளர் பெரியசாமி, வி.ஏ.ஓ., ஆதி நாராயணன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மாணவ, மாணவியர் மற்றும் மக்களின் தேவைக்காக வழிப்பாதையை அமைத்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நாளை, (அக், 22) காலை, 11:00 மணிக்கு பூட்டு போடும் போராட்டம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. ]