உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி

மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி தலைவர் மணி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டுகளிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழைநீரை வீணாக்காமல் சேமிக்கும் நோக்கிலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மழைநீர் சேரிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதை வழியுறுத்தும் வகையிலும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ