உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மயான வசதிக்கு கோரிக்கை

மயான வசதிக்கு கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிசெட்-டிப்பாளையம் பஞ்.,க்கு உட்பட்ட பாப்பிசெட்டிப்-பட்டியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்-களை, அரூர் - கடத்துார் சாலையோரத்தில், அடக்கம் செய்து வருகின்றனர்.மேலும், ஏற்கனவே அடக்கம் செய்த இடத்தில், மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலை-யுள்ளது. மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க-வில்லை. இங்கு அரசுக்கு சொந்தமான புறம்-போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ