சாக்கடை கால்வாய் அமைக்க கோரிக்கை
அரூர்; அரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லா-ததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசி வருவதால், பகுதிவாசிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாக்-கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.