உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண், பாறைகள் சரியும் நிலையில் வத்தல்மலையில் விபத்து அபாயம்

மண், பாறைகள் சரியும் நிலையில் வத்தல்மலையில் விபத்து அபாயம்

தர்மபுரி: வத்தல்மலை பகுதி, மலைப்பாதைகளில் ஆபத்தான நிலையில் சரிந்து விழும் நிலையில் உள்ள மண் மற்றும் பாறைகளை அப்பு-றப்படுத்த, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வத்தல்மலையில் கடந்த, 2024ல் 'பெஞ்சால்' புயலால் கடந்-தாண்டு டிச., 1ல் இரவு பெய்த கன மழையால் டிச., 2ல் காட்-டாற்று வெள்ளம் ஏற்பட்டு, வத்தல்மலை அடிவாரத்தில் இருந்த தரைபாலம் அடித்து செல்லப்பட்டது. வத்தல்மலைப்பாதையின், 7 முதல், 13 வரையிலான கொண்டை ஊசி வளைவில், அதிக-ளவில் மண் சரிவும், 18 முதல், 22 வரையிலான கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான பாறைகள் என, 15 கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டது. சாலை துண்டிக்கப்பட்-டதில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு, 10 மலைக்கி-ராம மக்கள் முடங்கினர்.கொண்டகரஹள்ளி பஞ்., நிர்வாகம் மூலம் மலைப்பாதையில் சரிந்து விழுந்திருந்த மண் மற்றும் பாறைகள் அப்புறப்படுத்தப்-பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. ஆனால், சாலையோரத்தில் மலைப்பகுதியில் சரியும் நிலையில் இருந்த மண் மற்றும் பாறைகள், மழைக்காலம் முடிந்த பின், அகற்றப்படும் என பஞ்., நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் இதுவரை அகற்றப்படவில்லை. அவை எப்போது வேண்டுமா-னாலும் சாலையில் சரிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வத்தல்மலை மலைப்பாதையில், விபத்தை ஏற்படுத்தும் வகையில், சரியும் நிலையிலுள்ள மண் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்த, வாகன ஓட்டிகளும், மலைக்கிராம மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ