உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதனை

செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் சாதனை

தர்மபுரி, தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில், 2025--2026ம் கல்வியாண்டில், பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, அக்‍டோபர், 11ம் தேதி மாநில அளவில் நடந்தது. இதில் அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.இதில், 100 மதிப்பெண்களுக்கு, 99 மதிப்பெண்கள் பெற்ற மாணவி கனிஷ்கா, 99, மாணவர்கள் தருண்குமார், ஜூபோ, 97 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் துரைராம், 96 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ராம்சரண் ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர் கந்தபிரசாத் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், மாணவ, மாணவியரை வாழ்த்தி, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ