உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கடத்துார் பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கடத்துார் பஸ் ஸ்டாண்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி :கடத்துார் பஸ் ஸ்டாண்டில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடத்துார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு கிராமங்களின் மைய பகுதியாகவும் விளங்குகிறது. தங்களின் அத்தியாவசிய தேவைக்காக, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் கடத்துார் நகரத்தை நோக்கி வருகின்றனர். இங்கிருந்து தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், வணிகர்கள் சென்று வருகின்றனர்.கடத்துார் பஸ் ஸ்டாண்டில், இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை உள்ளது. ஆனால், இதன் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் செல்ல வழியின்றி, பின்புறம் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீர் தேங்காதவாறு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ