ரூ.1.89 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி, நவ. 21-தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், இம்மாதத்தின், 15 நாட்களில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை.இந்நிலையில், 302 விவசாயிகள், 736 குவியல்களாக, 22.3 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இது, 235 முதல், 661 வரை சராசரியாக, 497 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 1.89 கோடி ரூபாய்.