சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை
பென்னாகரம், ஜன. 4-பாப்பாரப்பட்டி அருகே, சி.ஆர்.பி.எப்., ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன், 27 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 40. இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த, 2004ல், சி.ஆர்.பி.எப்., பணியில் சேர்ந்து, 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவர் சில ஆண்டுகளாக அசாம் மாநிலம் மற்றும் மணிப்பூரில் பணியில் இருந்தார். இந்நிலையில், கோவிந்தசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அங்கேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த, 2ல், இறந்தார். அவரது உடல் விமானம் மூலம், கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் சொந்த ஊரான மாமரத்துபள்ளத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று, 27 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.