மேலும் செய்திகள்
ரூ.26 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
09-Aug-2025
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பொம்பட்டியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் நவநீதகிருஷ்ணன், 14. இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மொரப்பூர், கம்பைநல்லுார் சுற்று வட்டராத்தில் மழை பெய்தது. அப்போது, வீட்டில் இருந்த மின்சுவிட்சை நவநீதகிருஷ்ணன் போட்ட போது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Aug-2025