சுப்பிரமணிய சிவா நினைவஞ்சலி
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள, சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின், 100வது நினைவு தினம், நேற்று முன்தினம் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர், சுப்பிரமணிய சிவா நினைவிடம், அதன் அருகிலுள்ள, பாரத மாதா சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர். இதில், தமிழ்நாடு பிராமண சங்க மாநில அமைப்பாளர் குமார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஓசூர் நிர்வாகிகள் நாகராஜன், சீனிவாசன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.