உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சுப்பிரமணிய சிவா நினைவு தினம் பாப்பாரப்பட்டியில் அனுசரிப்பு

சுப்பிரமணிய சிவா நினைவு தினம் பாப்பாரப்பட்டியில் அனுசரிப்பு

பாப்பாரப்பட்டி, பாப்பாரப்பட்டியில், விடுதலை போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின், 100வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், பாப்பாரப்பட்டியில், விடுதலை போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவாவின், 100வது நினைவு தின நிகழ்சி அவரது மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஸ் மலர்களால் அலங்கரித்த விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிர மணிய சிவா நினைவிடம், நினைவுத்துாண் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்தும், அவரது உருவ படத்திற்கு மலர் துாவியும் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், பென்னாகரம், பா.ம.க., எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, தாசில்தார் சண்முகசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், லோகநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி