உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தாளவாடி, கடம்பூர் மலை கிராம மக்கள் வீட்டு மனை பட்டா கோரி மனு

தாளவாடி, கடம்பூர் மலை கிராம மக்கள் வீட்டு மனை பட்டா கோரி மனு

ஈரோடு, நவ. 19-தாளவாடிமலை யூனியன் திங்களூர் கிராமத்தை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது: தாளவாடி யூனியன் திங்களூரில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவருமே மானாவாரி விவசாய கூலி தொழிலாளர்கள். மலைவாழ் எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள்.இதில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா இல்லை. வேறு நிலம், வீடு இல்லாததால் ஒரே சிறிய வீட்டில் 2, 3 குடும்பத்தினர் சேர்ந்து வாழ்கிறோம். எங்கள் மனுவை விசாரித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்கி, வீடு கட்ட வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.இதேபோல் கடம்பூர், கரளையம் பகுதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இதில், 35 பேருக்கு மட்டும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில் தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தனர். பல ஆண்டுகள் ஆனதால் சேதமடைந்துள்ளன. அவற்றை பராமரிக்கவும் வசதி இல்லை. தவிர ஒவ்வொரு வீட்டிலும், 3, 4 குடும்பத்தினர் சேர்ந்து வாழ்கிறோம். அவ்வீடுகளுக்கு பதில் வேறு வீடு கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள திருமணமான நபர்களுக்கும் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை