பாலக்கோபள்ளியில் தொட்டி உடைந்தது குடிநீரின்றி மாணவர்கள் தவிப்பு
பாலக்கோபள்ளியில் தொட்டி உடைந்தது குடிநீரின்றி மாணவர்கள் தவிப்புஅரசு , நவ. 28-பாலக்கோடுடு அருகே, அரசு பள்ளியில் உடைந்த மினி சின்டெக்ஸ் தொட்டி மாற்றபடாததால், குடிநீர் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.செட்டிஹள்ளி பஞ்., உட்பட்ட கொம்மநாயக்கனஹள்ளியில் உள்ள, அரசு தொடக்க பள்ளியில், 22 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களின் குடிநீர் தேவை மற்றும் காலை சிற்றுண்டி, மதிய உணவு உள்ளிட்ட சமயலுக்கு பயன்படுத்த, பள்ளி வளாகத்தில் மினி சின்டெக்ஸ் தொட்டி அமைக்கபட்டு, பஞ்., நிர்வாகம் மூலம், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மினி டேங்க் உடைந்தது. இதனால், பள்ளிக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வேறுவழியின்றி, 300 மீட்டர் தொலைவிலுள்ள பஞ்., மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து, காலை நேரத்தில் குடங்களில் பள்ளியில் வேலை செய்யும் சமையலர்கள் குடிநீரை கொண்டு வருகின்றனர். ஒருசில நாட்களில் மின்தடை மற்றும் மின்மோட்டார் பழுது ஏற்பட்டால், மாணவர்களுக்கு எளிதில் குடிநீர் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், உடைந்த மினி டேங்கை மாற்றி, புதிய மினி சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.