மேலும் செய்திகள்
தக்காளி விலை உயர்வு
26-May-2025
தக்காளி அறுவடை; தயாராகும் விவசாயிகள்
13-Jun-2025
பாலக்கோடு, பாலக்கோடு பகுதியில், தொடர் மழையால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. அதனால் அதன் விலையில் உயர்வு காணப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், தொடர் மழையால், தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. தக்காளி சந்தையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ தக்காளி, 16 முதல், 20 ரூபாய் வரையும், 15 கிலோ கொண்ட தக்காளி கூடை, 300 ரூபாய் வரையும் உயர்ந்து விற்பனையாகிறது.கடந்த, 6 மாதங்களாக ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கும் குறைவாக விற்ற நிலையில், தற்போது இந்த விலை உயர்வு, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து தேனி, திண்டுக்கல், ஈரோடு பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
26-May-2025
13-Jun-2025