மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவிகள் மாயம் போலீஸ் விசாரணை
14-Mar-2026
பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அடுத்த சுங்கரஹள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ், 44. மாட்டு வியாபாரி. இவரது மகள் காவியா, 20. இவர், தர்மபுரி அரசு கலை கல்லுாரியில், பி.எஸ்சி., விலங்கியல், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 23ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை புகாரின் படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோன்று, கடத்துாரை சேர்ந்த, 49, வயது கூலித்தொழிலாளியின், 17 வயது மகள் பி.பள்ளிப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ, 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 23ல் காலை கல்லுாரிக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. புகார் படி, கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Mar-2026