உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உழவர் சந்தையில் காய்கறிகள் ரூ.11.67 லட்சத்துக்கு விற்பனை

உழவர் சந்தையில் காய்கறிகள் ரூ.11.67 லட்சத்துக்கு விற்பனை

தர்மபுரி :தர்மபுரி டவுன் உழவர் சந்தையில், நேற்று, 37 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது. தர்மபுரி டவுன் உழவர் சந்தையில், நாளொன்றுக்கு, 20 முதல், 25 டன் காய்கறிகள் விற்பனையாகும். புரட்டாசி மாதத்தில் வரும், அனைத்து சனிக்கிழமை நாட்களிலும், பெருமாள் சுவாமிக்கு பக்தர்கள் விரதம் இருந்து, படையலிட்டு வழிபடுவது வழக்கம். நேற்று, புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால், உழவர் சந்தையில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையானது. நேற்று அதிகாலை முதல், 126 விவசாயிகள், 7,460 நுகர்வோர் உழவர் சந்தைக்கு வந்தனர். இதில், 37 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள், 11.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி