மேலும் செய்திகள்
கெலமங்கலத்தில் ஊர்வலம் விநாயகர் சிலைகள் கரைப்பு
03-Sep-2025
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளி கிராமம் ஆஞ்சநேயர் கோவிலை நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வாலிபர் ஒருவர் நோட்டமிட்டபடி இருந்தார். இதைப்பார்த்த மக்கள் திருட வந்திருப்பதாக நினைத்து வாலிபரை பிடிக்க முயன்றனர். தப்பியோடிய நிலையில், நேற்று காலை மீண்டும் கோவில் அருகே வந்தார். இதனால் மக்கள் அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். கெலமங்கலம் போலீசார் வாலிபரை மீட்டு விசாரித்தனர். ஓசூர் அருகே கோபனப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி சேகர், 22, என தெரிந்தது. யாரும் அவர் மீது புகார் கொடுக்க முன்வராததால், எழுதி வாங்கி கொண்டு அவரை எச்சரித்து அனுப்பினர்.
03-Sep-2025