உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

வேடசந்துார், ஜூன் 13 திண்டுக்கல் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வியாபாரி ஜெயச்சந்திரன் 42. இவர் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாகனத்தில் கொண்டு சென்று சப்ளை செய்கிறார். கிரியம்பட்டி நெடுஞ்சாலையில் ஜெயச்சந்திரனை தாக்கிய நபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 ஆயிரம் , அலைபேசியை பறித்துச்சென்றார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் மாரம்பாடி பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமாரை 36, கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !