உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முத்தரையர் பிறந்தநாள் விழா

முத்தரையர் பிறந்தநாள் விழா

நத்தம்,மே 24- நத்தத்தில் முத்தரையர் சங்கம் சார்பில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் ஆண்டிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சின்னச்சாமி, துணைத் தலைவர் அன்பு, பொருளாளர் சின்னச்சாமி, துணை செயலாளர்கள் பெருமாள்ராஜா, பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சேர்வீடு விலக்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம் நடந்தது. சங்க நிர்வாகிகள் சேகர், நவீன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !