கைலாசநாதர் கோயிலில் உழவாரப்பணி
நத்தம் : நத்தம்- கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் -செண்பகவல்லி அம்மன் கோயிலில் உலகசிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உழவார பணிகள் நடந்தது. மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. சுவாமிக்கு பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கழுவப்பட்டு கோவில் வளாகத்தில் கிடந்த குப்பைகள் அகற்றபட்டது. பின்னர் கோவில் பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டது.